மக்காச்சோளம் விலை சரிவு : விவசாயிகள் சோகம்மக்காச்சோளம் கொள்முதல் விலை மூட்டைக்கு 20 ரூபாய் சரிவு, விவசாயிகளுக்கு சோகத்தையும், பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. கோழித்தீவனம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் மக்காச் சோளத்தின் சதவீதம் 55 முதல் 60 சதவீதம். பல்லடம் பகுதியில் உள்ள கறிக்கோழிகளுக்கு தீவனம் தயாரிக்க, பல்லடம், உடுமலை மற்றும் பொங்கலூர் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் மக்காச் சோளம் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த மாதம், கர்நாடகத்தில் இருந்து பல்லடம் பகுதிக்கு மக்காச்சோளம் வரத்து குறைவாக காணப் பட்டது. சில நாட்களாக, பல்லடம் பகுதிக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்காச் சோளம் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, உள்ளூர் மக்காச்சோளம் விலை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் சரிந்துள்ளது; தற்போது, ஒரு மூட்டை மக்காச்சோளம் விலை 850 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு மோசம் இல்லை என்றாலும் கூட, ஐந்து நாட்களில் ஒரு மூட்டைக்கு 20 ரூபாய் சரிவு, பல்லடம் பகுதியில் உள்ள மக்காச் சோளம் விவசாயிகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது; கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports