தென்னையில் சிலந்தி நோய்: பொள்ளாச்சி இளநீருக்கு 'மவுசு'

காரைக்குடி:மாவட்டத்தில் இளநீர் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை, பொள்ளாச்சி இளநீர் அதிகளவில் விற்கப்படுகிறது. மாவட்டத்தில் 4,500 எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவம் மழை பொய்த்ததால், பல கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டன. இதனால் தென்னை மரங்களில் பசுமை இழந்து, சிலந்தி நோய் தாக்கியுள்ளது.நோயை தடுக்க அதிக தொகை செலவாகிறது. இதனால் இளநீரை பறிக்காமல், விவசாயிகள் விட்டு விடுகின்றனர்.


பறித்தவைகளும் நோய் தாக்கி சுருங்கி விடுகின்றன. ஒரு இளநீர் இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை தான் விலை போகிறது.பொள்ளாச்சிக்கு "மவுசு': இதனால், வியாபாரிகள் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் விளையும் இளநீரை கொள்முதல் செய்து, காரைக்குடியில் விற்கின்றனர்.இதுகுறித்து வியாபாரி தங்கம் கூறியதாவது:நோய் தாக்குதலில் இளநீர் விளைச்சல் பாதிக் கப்பட்டுள் ளது. இரண்டு மாதமாக பொள்ளாச்சி, கோவை இளநீரை விற்கிறேன். இவை சுவையாக இருக்கின்றன. ஒரு காய்க்கு ஐந்து ரூபாய் வரை லாபம் கிடைப்பதால், அதிகளவில் கொள்முதல் செய்கிறோம், என்றார்.


விவசாய அலுவலர் நடராஜன் கூறியதாவது:தண்ணீர் பற்றாக்குறையால், தென்னையில் சிலந்தி நோய் தாக்கியுள்ளது. இதனால் மகசூல் குறைய வாய்ப்பு இல்லை. காய்களின் பருமனில் மாற்றம் ஏற்படும். இளநீர் ருசி இருக்காது. நோயை கட்டுப்படுத்த, 15 நாட்களுக்கு ஒரு முறை வேம்பு மருந்தை வேர் மூலம் செலுத்த வேண்டும். நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports