மீன் குஞ்சு வளர்ப்பு மையம்மானியத்தில் அமைக்க அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் மீன் குஞ்சு வளர்ப்பு மையம் அமைக்க கலெக்டர் விஜயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்।இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:மீன்குஞ்சு உற்பத்தியில் தன்னிறைவு அடைய அரசுக்கட்டுப்பாட்டிலுள்ள மீன் பண்ணைகளின் தரத்தை உயர்த்தவும், தனியார் நிறுவனங்களுக்கு மானியம் அளிப்பதன் மூலம் மீன் குஞ்சு உற்பத்தியைப்பெருக்க மீன்வளத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தனியார்களை ஊக்குவித்து இரண்டு மீன்குஞ்சு வளர் ப்பு மையங்கள் 50 சதவீத மானியத்தில் மாவட்டத்தில் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

தகுதிகள்: விண்ணப்பதாரர் ஒரு ஹெக்டேர் நிலம் சொந்தமாக வைத்திருக்கவேண்டும். குத்தகை நிலமாக இருப்பின் பத்து ஆண்டுகளுக்கு குறையாமல் பதிவு செய்திருக்க வேண்டும். வெள்ளத்தினால் பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும். போதிய நீர்வசதி மற்றும் சாலைவசதி இருக்கவேண்டும். பயனாளி மீன்வள மேம்பாட்டு முகமையில் உறுப்பினராகவும், மீன்குஞ்சு வளர்ப்பில் தேவையான பயிற்சி பெற்றிருக்கவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆர்வமுள்ள தனியார் மீன் வளர்ப்பாளர்கள் திருச்சி, மன்னார்புரம் 59 பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மீன்வளத்துறை உதவிஇயக்குநர் அலுவலகத்தை (தொலைபேசி எண்- 2421173) அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports