செம்மை நெல் சாகுபடி செய்யும் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்க முடிவு

செம்மை நெல் சாகுபடி செய்யும் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு கிஷான் கிரிடிட் கார்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளை செம்மை நெல் சாகுபடி செய்ய அரசு வலியுறுத்துகிறது. செம்மை நெல் சாகுபடியில் வழக்கமான மகசூலைவிட 20 முதல் 30 சதவீத மகசூல் அதிகரிக்கும். ஏக்கருக்கு 25 கிலோ நெல் விதை பயன்படுத்துவதற்கு பதிலாக 3 கிலோ விதை நெல் போதுமானது. ஏக்கருக்கு எட்டு சென்ட் இடத்தில் நாற்றாங்கால் அமைப்பதற்கு பதிலாக ஒரு சென்ட் இடத்தில் நாற்றாங்கால் அமைத்தால் போதுமானது, அதிக நீர் செலவு ஏற்படாது என வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூறி வருகின்றனர். ஆனாலும் விவசாயிகள் செம்மை நெல்சாகுபடியில் ஆர்வம் இன்றி உள்ளனர். செம்மை நெல் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு புதிய சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் 20 ஆயிரம் பேருக்கு கடன் அட்டைகள் (கிஷான் கார்டு) வழங்கப்பட உள்ளது. கிஷான் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பிணையம் இன்றி கடன் வழங்க அனுமதிக்கப்படும்.
வேளாண் துறை அதிகாரிகள் கிஷான் கார்டு வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளில் காரீப், ராபி பருவங்களில்பயிர் சாகுபடி செய்துள்ள விபரம், சிறு, குறு, பெரிய விவசாயிகள் பட்டியல் தயார் செய்து வருகின்றனர். சிவகாசி உட்பட ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஆயிரம் கடன் அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports