கடலூர் :நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டத்தில் 114 இடங்களில் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 114 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் சம்பா நெல் அறுவடை துவங்கியுள்ளது. அறுவடை செய்யும் நெல்லை இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வருகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த ஆண்டு 114 கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீரப்பெருமாநல்லூர், சிறுவரப்பூர் பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி பைத்தம்பாடி மற்றும் வீரபெருமாநல்லூரிலும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, கடலூர் தாலுக்காக்களில் நேற்று 66 கொள்முதல் நிலையங்கள் திறக்கப் பட்டது. சிதம்பரம் தாலுகாவில் 46 கொள்முதல் நிலையங்கள் வரும் 20ம் தேதி திறக்கப்பட உள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports