செண்டுப் பூ விலை வீழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம்,​​ நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மாலை கட்டப் பயன்படும் செண்டு பூ விலை வீழ்ச்சி அடைந்தது.​ மார்கழி மாதமானதால்,​​ செண்டுப் பூ விலை வீழ்ச்சி அடைந்தது.

​ செண்டுப்பூ விலை 1 கிலோ பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது.​ கூலிக்கே பணம் கிடைக்காததால்,​​ விவசாயிகள் வெறுப்படைந்து இப் பூக்களை குப்பையில் கொட்டினர்.​ இதுபற்றி விவசாயி கணேசன் கூறியதாவது:

​ ​ ​ செண்டுப் பூவைப் பறிக்க,​​ மார்க்கெட் கொண்டு வர நிறைய செலவாகிறது.​ தற்போதைய விலையைக் கணக்கிட்டால்,​​ நஷ்டம்தான் வரும்.​ எனவேதான்,​​ வெறுப்படைந்து சில விவசாயிகள் செண்டு பூக்களைக் குப்பையில் கொட்டியுள்ளனர் என்றார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports