அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் தொடங்க வேண்டிய பருவமழை தாமதமாக நவம்பர் துவங்கி இரண்டு கட்டங்களாக மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்திலும் வழக்கத்துக்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய வறண்ட வானிலையைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகியது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்: அரியலூர் 24 மி.மீ., செந்துறை 32 மி.மீ., ஜெயங்கொண்டம் 20 மி.மீ., திருமானூர் 17 மி.மீ., மாவட்டத்தில் பெய்த சராசரி மழையளவு 23.25 மி.மீ., ஆகும்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports