கோமுகி அணை நிரம்பியது வரத்து நீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி : சில தினங்களாக பெய்த மழையால் கோமுகி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 561 மில்லியன் கன அடியை எட்டியது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை அடி வாரத்தில் கோமுகி அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 561 மில்லியன் கன அடியாகும். சில தினங்களாக பெய்த தொடர் மழையால் நேற்று அணையின் நீர் பிடிப்பு 561 மில்லியன் கன அடியை எட்டியது.
தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று அணைக்கு 610 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி ஷட்டர்கள் திறந்து, வரத்து நீர் 610 கன அடி தண்ணீரும் ஆற்று வழியாக வெளியேற்றப்பட்டது. ஆற்றின் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் 11 அணைக்கட்டுகள் வழியாக விவசாய பாசன வசதியை பெறுகிறது. அணையில் மொத்த கொள்ளளவும் எட்டியதால் கோமுகி அணை இளநிலை பொறியாளர் கணேசன், ஊழியர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports