விழுப்புரம் ஏரி, குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலை! எதிர்பார்த்த மழை கிடைக்குமா?


தியாகதுருகம் : கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் வெறும் தூரல் மட்டும் பெய்தது. இப்பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இவ்வாண்டு தென் மேற்கு பருவமழை எதிர் பார்த்தபடி பெய்யாததால் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையும் தாமதமானதால் சம்பா சாகுபடி செய்வது கேள்விக்குறியானது. இந்நிலையில் தாமதமாக துவங்கிய வடகிழக்கு பருவமழை நவம் பர் மூன்றாவது வாரத்தில் பரவலாக மழைபொழி வை கொடுத்தது.
தியாகதுருகம், ரிஷிவந் திம் பகுதி ஏரி, குளங்கள் பாதியளவே நிரம் பின. இதனால் ஏரிபாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலையடைந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் உருவான "வார்டு' புயல் காரணமாக மழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்ததால் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத் திருந்தனர்.
இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட "வார்டு' புயலால் கடந்த நான்கு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதியில் மூன்று நாட்களும் தூரல் மழை மட்டுமே பெய்தது. வலுத்து மழை கொட்டாததால் சாலைகளில் குட்டையாக தேங்கி நிற்கும் அளவிற்கே மழை பெய்தது. இதனால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்ததே தவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைக்கு செல்லும் அளவிற்கு மழை பெய்யவில்லை. புயல் கரையை கடந்த வேளையில் மட்டும் சற்று கனமழை பெய்தது. இதனால் எதிர்பார்த்த அள வுக்கு ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை.
வங்ககடலில் உருவாகும் புயல் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் கரையை கடப்பது வழக்கம். "வார்டு' புயல் தமிகழத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்ததால் விழுப்புரம் மாவட் டத்தில் கனமழை பெய் யும் என்று விவசாயிகள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத் திருந்தனர். ஆனால் தூரல் மழையுடன் முடிவுக்கு வந்ததால் ஏரி, குளங்கள் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற் றமே ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் உருவான புயலால் விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை கிடைத்தது. அதேபோல் அடுத்த புயல் உருவாகும்போதாவது, எதிர் பார்த்த மழை கிடைக் குமா? என்று விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக் கின்றனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports