விவசாயிகள் சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் பெற சிறப்பு முகாம்:​ ஆட்சியர்

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டத்தின் கீழ் அரசு உதவிகள் பெற சிறப்பு முகாம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ​

ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்துள்ளார்.

​ ​ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,​​ தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களும் பயன்பெறத் தக்க வகையில் டிச.​ 23-ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக ​ வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

​ இம்முகாமில்,​​ மேற்படி திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற்றுள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள் திருமணத்திற்கான உதவித்தொகை,​​ விபத்து மற்றும் இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை,​​ முதியோர் உதவித்தொகை கோரி மனு செய்யலாம் என கூறியுள்ளார்.

​ ​ ​ ​ ​ மேலும் இத்திட்டத்தின் கீழ் மனுச் செய்து நிதியுதவி பெறாமல் இருப்பவர்கள்,​​ இத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெறாமல் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக உறுப்பினர் அடையாள அட்டைகள் பெறுவதற்கு மனுச்செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports