செஞ்சி பகுதியில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் மழையால் நிலத்தில் சாய்ந்தன
Top City news update செஞ்சி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பொன்னி நெல் பயிர்கள் தொடர் மழையால் நிலத் தில் சாய்ந்தன. செஞ்சி பகுதியில் பருவமழை கால தாமதமாக பெய்ததால் வழக்கத்தைவிட சம்பா நடவு குறைந் தது. இதில் நடவு செய்த பொன்னி நெல் பயிர்கள் கதிர் முற்றி அடுத்த சில நாட்களில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் நெல் பயிர்கள் நிலத் தில் சாய்ந்தன. ஒரு பகுதி நெல் கதிர்கள் தரையில் இருந்த தண்ணீரில் நனைந்து முளைவிடும் நிலைக்கு சென்றன.
கதிர் முற்றும் பருவத்தில் பூச்சி தாக்குதலை தடுக்க விவசாயிகள் பூச்சி மருந்து தெளிப்பது வழக் கம். தற்போது பயிர்கள் நிலத்தில் சாய்ந்து இருப்பதால் நிலத்தில் நடந்து சென்று மருந்து தெளிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. மருந்து தெளித் தாலும் அடிப்பகுதி வரை மருந்து பரவாமல் மேலே படர்ந்துள்ள கதிர்கள் கூடுபோல தடுத்து விடும்.
இதனால் அடிப்பகுதியில் சிக்கி உள்ள நெற்கதிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு நெல்லின் தரம் குறையும் என விவசாயிகள் கூறுகின்றனர். அத்துடன் மகசூலும் குறையும் என்பதால் செஞ்சி பகுதியில் பொன்னி நடவு செய்திருந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports