தொடர் மழையால் காபி தளிர் உலர்த்துவதில் சிக்கல்

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக காபி தளிர்கள் உலர்த்துவதில் பிரச்னை காணப்படுகிறது. வெளிர் நிறம் கிடைக்காமல் தளிர்கள் கருப்பாக மாறி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி,அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காபி சீசன் துவங்கி,பழங்கள் பறித்து பல்பர் மூலம் அரைத்து உலர்த்தி விற்பனைக்கு தயார்படுத்தும் பணி நடக்கிறது. மழை, கடும் பனிப்பொழிவால் காபி தளிர்களை உலர்த்துவதில் பிரச்னை உள்ளது.கடந்த 15 நாட்களாக வெயில் இல்லாததால் காபி தளிர்களை உலர்த்த வைக்க முடியாமல் வீடுகளின் பரண்களில் காயவைத்துள்ளனர்.ஒரு கிலோ.,காபி கொட்டை விலை துவக்கத்தில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டது. தற்போது வெளிர் நிறமான காபி தளிரை பக்குவப்படுத்துவதில் பிரச்னை இருப்பதால் தளிர்கள் கருப்பாக மாறி வருகிறது.இதனால் போதிய விலை கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்ச நிலை விவசாயிகளிடையே காணப்படுகிறது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports