புதுக்கோட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

திருவரங்குளம்: திருவரங்குளம் வட்டாரத்தில் கீரமங்கலத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து குளமங்கலம் உழவர் மன்ற அமைப்பாளர் முத்துராசு கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை: ஆலங்குடி தாலுகாவில் தென்னை உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ளனர். இப்பகுதியில் சுமார் ஆயிரத்து 200பேர் கொப்பரை விற்பனைக்கு அடையாள அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். இன்னும் ஏராளமான தென்னை விவசாயிகள் அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க உள்ளனர். தென்னை விவசாயிகள் தங்கள் கொப்பரையை விற்பனை செய்ய அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பஸ் செலவு, காலம் வீணாகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கொப்பரை விவசாயிகள் அதிகம் உள்ள கீரமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொப்பரை கொள்முதல் நிலையக்கிளை திறக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports