திண்டிவனத்தில் இயற்கை பண்ணை - காளான் கள் வளர்ப்பதில் சிறந்து விளங்கியவருக்கு, "வேளாண்மை செம்மல்' விருது

திண்டிவனம் : திண்டிவனத்தில் காளான் கள் வளர்ப்பதில் சிறந்து விளங்கியவருக்கு, "வேளாண்மை செம்மல்' விருது வழங்கப்பட்டுள் ளது.அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிலையில், உடலுக்கு பல வகையில் உதவும் காளான் உணவு மீது மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
கொழுப்பு சத்து குறைவான காளான் உணவில் புரதம், மாவு, நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் அதிகளவு இருப்பதால், மக்களிடம் வரவேற் பை பெற் றுள்ளது.காளான் களில் நியாசின் என்ற விட்டமின் கள் அதிகளவு உள்ளதால், பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். கொழுப்பு, சக்கரை நோய் பாதித்தவர் கள் காளான் உணவுகளை சாப் பிட்டால் நல்லது என, டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர்.விழுப்புரம் மாவட் டத்தில் முதன் முதலாக காளான் பண்ணையை கடந்த 2004ம் ஆண்டு, திண் டிவனம் கோட்டைமேட் டைச் சேர்ந்த அக்பர் என்பவர் அமைத்தார். இவரது பண்ணையில் சிப்பி, பால் காளான்களை இயற்கை முறையில் வளர்த்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் ராணிப் பேட்டை, ஆற்காடு, வேலூர், சென்னை பகுதிகளுக்கும் தினமும் அனுப்பி விற்பனை செய்கிறார். காளான்சூப், பிரியாணி, சப்பாத்தி, காளான் 65 என பல சுவையான உணவுகளை தயாரித்து தினமும் விற்பனை செய்கிறார்.இவரது பண்ணையில் சிப்பி காளான்கள் கிலோ 120 ரூபாய்க்கும், பால் காளான்கள் கிலோ 150க் கும் விற்கிறார். இதில், பால் காளான் கள்தான் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.காளான் கள் வளர்ப்பில் முன்னுரிமை காட்டி வரும் அக்பருக்கு, கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, கோயம் புத்தூரில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், "வேளாண்மை செம்மல்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports