சம்பா நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி

கடலூர் : தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக வயல்களில் விளைந்துள்ள சம்பா நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு காவரி டெல்டா பகுதிக்கு தண்ணீர் தாமதமாக திறந்துவிடப்பட்டதால் சம்பா நடவும் தாமதமாக துவங்கியது. ஆனால் கடலூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகள், ரெட்டிச்சாவடி, திருவந்திபுரம் பகுதிகளில் ஆழ்குழாய் போர் மூலம் தண்ணீர் இறைத்து முன்கூட்டியே நடவு பணிகளை துவக்கினர்.


தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் தமிழகத்தில் தாமதமாக துவங்கிய பருவமழையாலும், வார்டு புயல் காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.இதனால் விளைந்திருந்த நெற்கதிர் கனமழையில் சாய்ந்துள்ளன. வயல்களில் தண்ணீர் வடியாமல் தொடர்ந்து தேங்கி வருவதால் கதிர்கள் சாய்ந்து மழைநீரில் நனைந்து பாழாகி வருகின்றன.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports