நுண்ணூட்டச்சத்து மேலாண்மை பயிற்சி

குளித்தலை: குளித்தலை அருகே பணிக்கம்பட்டியில் வேளாண் பயிர்சாகுபடியில் நுண்ணூட்டச்சத்து மேலாண் பயிற்சி நடந்தது. குளித்தலை அருகே புழுதேரி சரஸ்வதி கே.வி.கே., கரூர் நபா ர்டு வங்கி நிதியுதவியுடன் பணிக்கம்பட்டியில் வேளாண் பயிர் சாகுபடியில் நுண்ணூட்டச்சத்து மேலாண் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் வள்ளல் க ண்ணன் தலைமையில் நடந்தது. முகாமில் அவர் பேசியதாவது:

வேளாண் பயிர் சாகுபடியில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம். மண்ணில் சத்து குறிப்பிட்ட அளவு மட்டும் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகள் தழை, மண், சாம்பல் சத்துக்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதனால் தாவரங்களுக்கு தேவையான நுண்ணூட்டச்சத்து போதுமான அளவு கிடைப்பதில்லை. இதன் விளைவு பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு தோன்றுகிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அறித்து அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் அனிதா, வள்ளியம்மை, ஆனந்தப்பிரியா ஆகியோர் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports