விவ​சா​யி​க​ளுக்கு தர​மான விதை உற்​பத்தி பயிற்சி

பர​மத்​தி​வே​லூர்,​​ டிச.15: பர​மத்தி வேலூர் தாலுகா பர​மத்தி வேளாண்மை துறை சார்​பில் விவ​சா​யி​க​ளுக்​குத் தர​மான விதை உற்​பத்தி செய்​வது குறித்த தொழில் நுட்ப பயிற்சி வரும் 21-ம் தேதி முதல் நடை​பெ​று​கி​றது.​
​ பர​மத்தி வேளாண்மை உதவி இயக்​கு​னர் க.வீரப்​பன் செய்​திக்​கு​றிப்​பில் கூறி​யி​ருப்​ப​தா​வது:​ பர​மத்தி வட்​டா​ரத்​தில் வேளாண்​மைத் துறை மூலம் விதை கிராம திட்​டத்​தின் கீழ் 500 விவ​சா​யி​கள் தேர்வு செய்​யப்​பட்டு அவர்​க​ளுக்கு நிலக்​க​டலை,​பயிர் வகை மற்​றும் சிறு தானிய பயிர்​க​ளில் விதை​கள் உற்​பத்தி செய்​வது குறித்த தொழில் நுட்ப பயிற்சி மூன்று நிலை​க​ளில் நடை​பெ​று​கி​றது.​ ​
​ விதை நிலை,​​ பூக்​கும் நிலை,​​ அறு​வ​டை​நிலை ஆகி​யவை குறித்து தர​மான விதை​கள் உற்​பத்தி செய்ய பர​மத்தி,​​ பில்​லூர்,​​ வில்​லி​பா​ளை​யம்,​​ கூடச்​சேரி,​​ மணி​ய​னூர்,​​ கோளா​ரம்,​​ பிராந்​த​கம்,​​ செறுக்​கலை,​​ இருட்​டணை மற்​றும் புன்​செய் இடை​யாறு மேல்​மு​கம் ஆகிய கிரா​மங்​க​ளில் வரும் 21-ம் தேதி முதல் பயிற்​சி​கள் நடை​பெ​று​கி​றது.​ பயிற்​சி​யில் கலந்து கொள்ள விருப்​பம் உள்ள விவ​சா​யி​கள் அந்​தந்​தப் பகுதி வேளாண்மை அலு​வ​லர்,​​ உதவி வேளாண்மை அலு​வ​லர் மற்​றும் துணை வேளாண்மை அலு​வ​லர் ஆகி​யோரை தொடர்பு கொண்டு பயிற்​சி​யில் கலந்து கொள்​ள​லாம் என வேளாண்மை உதவி இயக்​கு​னர் செய்​திக்​கு​றிப்​பில் கூறி​யுள்​ளா
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports