மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு : ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க கோரிக்கை

புதுச்சேரி : மழையால் பாதிக்கப் பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கீதநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: வார்டு புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர் கன மழை பெய்து வருகிறது. சம்பா நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர்விட்டு வளர்ந்திருந்த இந்த சூழ்நிலையில், கன மழையால் நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்து விட்டன.
இதனால் நெற்பயிர்கள் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர் பாராமல் பெய்த இந்த மழையால் விவசாயிகளின் சம்பா நெற்பயிர்கள் பெருத்த சேதமடைந்துள்ளது. சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை கொண்ட குழு அமைத்து பார் வையிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்று பயிராக கார்த்திகை மாதத்தில் விதையிடப்பட்ட மணிலா விதைகள் நீரில் மூழ்கி அழுகி விட்டன. எனவே மணிலா பயிருக்கும் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக் காவிட்டால் விவசாயிகளை திரட்டி வேளாண் துறை முன்பு போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports