பட்டாணி


பட்டாணி பருப்பு பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும். பைசம் சடய்வம்(ஆங்கிலம்:Pisum sativum ) என்று அறியப்படும் இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாகுவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர்.

ஆனால் சமையல் கலையில் இவைகள் காய்களாகவே பயன் படுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் இவை பொதுவாகவே பச்சை பட்டாணி என்றே அழைக்கப் படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை நிறத்திலும், சில இடங்களில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பல நாடுகளில் இவை உறைய வைக்கப்பட்ட நிலையிலும் விற்கப்படுகிறது.
உலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் இவை ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பணிக்கலாம் தொடங்கி வெயில் காலம் வரை, பயிரிடப்படும் இடத்திற்கேற்ப நடப்படுகிறது. ஒரு பட்டாணி விதை சுமார் ௦.1 முதல் ௦.36 கிராம் வரை இருக்கும்.
சத்துக்கள்:

பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. காய்ந்த நிலையில் இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports