உருளைக்கிழங்கு விலை நிலையாக இருக்கும் - வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு

உருளைக்கிழங்கு விலை நிலையாக இருக்கும் என்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளத்திற்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு முக்கிய இடம் பெற்றுள்ளது.

உலக அளவில் பொதுமக்கள் உணவில் உருளைக்கிழங்கு அதிகம் இடம் பெறு கிறது. உலக அளவில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு 22 சதவீதம் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இங்கு 12 சதவீதம் உருளைக்கிழங்கு உற்பத்தியாகிறது.

இந்தியாவில் 2014-15-ம் ஆண்டு 20.69 லட்சம் எக்டேர் பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய் யப்பட்டு, 459 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.

இங்கிருந்து இலங்கை, மாலத்தீவு, ஐக்கிய அரபு நாடுகள், மொரிஷியஸ், சிங்கப்பூர், குவைத் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன்படி 14.54 லட்சம் டன் உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 2013-14-ம் ஆண்டை காட்டிலும் 47 சதவீதம் அதிகமாகும்.

90 சதவீதம் உற்பத்தி

உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், பீகார், குஜராத், பஞ்சாப், மத்தியபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங் கள் இந்தியாவில் அதிக அளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆகும். இந்த மாநிலங்களில் 90 சதவீதம் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டில் தமிழகத்தில் 4,680 எக்டேர் நிலப்பரப்பளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு, 97 ஆயிரத்து 340 டன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 2013-14-ம் ஆண்டைவிட 8 சதவீதம் குறைவு. நீலகிரி உருளைக்கிழங்கை, பிற மாவட்ட உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில், அதிக சுவையாகவும், நீண்டநாட்கள் வைத்து பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது.

அறுவடை-வரத்து

கடைபோக உருளைக்கிழங்கு செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை விதைக்கப்பட்டு, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் குப்ரிஜோதி, குப்ரிகிரிராஜ் போன்ற ரகங்கள் பயிரிடப்பட்டு அறுவடையாகி உள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் சந்தையில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.23 வரை விற்பனையாகிறது.

கோலாரில் உற்பத்தி செய்து அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு வரத்து, தமிழக சந்தைகளில் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த வரத்து அடுத்த மாத (ஜனவரி) இறுதிவரை இருக்கும். உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிலவும் சாதகமற்ற தட்பவெப்பநிலை, உருளைக்கிழங்கு உற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது.

விலை நிலையாக இருக்கும்

இந்த நிலையில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டு றவு விற்பனை மையத்தில், கடந்த 18 ஆண்டுகளாக நிலவிய, உருளைக்கிழங்கு விலை நிலவரத்தை ஆய்வு செய்தது. இதில் உருளைக்கிழங்கு விலை நிலையாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதன்படி வருகிற மாதங்களில் உருளைக்கிழங்கின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.19 முதல் ரூ.21 வரை இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Views: 388

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2017   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service