தீமை தரும் பூச்சிகளுக்கு பிடிக்காத இலை தழைகள்

ஆடு, மாடு தின்னாத இலை தழைகள் தானே முளைத்து கண்ட கண்ட இடங்களிலெல்லாம் இருக்கின்றன.அவை நொச்சி, தும்பை, குப்பைமேனி, சீமை, அகத்தி, ஆடாதோடா, ஆடு தின்னாபாளை, சீத்தாப் பழம் இலை, வாத நாராயணன் சரக்கொன்றை அரளிச்செடி, சிறியாநங்கை, ஊமத்தை, கொளுஞ்சி, அவுரி, விராலி, உசிலை, இலை, வேம்பு இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இத்தகைய இலைகளையும் பசுமாட்டுக் கோமியத்தையும் சேர்த்து அல்லது கோமியம் இல்லாமல் பூச்சி விரட்டி தயாரிக்கலாம்.


இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான்: புகையிலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, வேப்பிலை முதலியவற்றில் ஒவ்வொன்றிலும் 500 கிராம் எடுத்து போதிய அளவு நீர் சேர்த்து உரலிலிட்டு ஆட்டிச் சாறு எடுத்து 10 லிட்டர் நீருடன் 200 மிலி சாறு சேர்த்துத் தெளித்தால் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் ஆகியவை அகன்று விடும். 


நுனி குருத்துப்புழு: பூண்டு 500 கிராம், இஞ்சி 500 கிராம், மிளகாய் 500 கிராம், வேப்ப விதை 500 கிராம் சேர்த்து அரைத்து 25 லிட்டர் நீரில் கலந்து 5 கிராம் சோப்புக் கரைசலை தெளிக்க வேண்டும். நிலத்தின் பரப்பு, பயிரின் வளர்ச்சி கண்டு தெளிக்கும் அளவை அனுபவத்தில் கூட்டியோ, குறைத்தோ தெளிக்கலாம்.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

Views: 1298

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2017   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service