கால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்

கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பசுந்தீவனம்

மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை உண்பதற்கு கால்நடைகள் தயங்கும். இதனால் கால்நடைகளுக்கு, மழைக்காலத்தில் உணவு தயாரிப்பு பற்றியும், அதனை அளிக்கும் முறை, சேமிப்பு திறன் போன்றவற்றில் கையாள வேண்டிய உத்திகளை பற்றியும், கால்நடை வளர்ப்போர் அறிந்து கடைபிடிப்பது அவசியம்.

பசுந்தீவனம் மழைக்காலத்தில் மிகுதியாக கிடைக்கும். கால்நடைகள் அதிகம் மழை பெய்த புல்லை உண்பதால் கழிச்சல், செரிமான கோளாறு, புழுக்கள் தாக்கத்தினால் அவதிப்படும். மழைக்காலத்தில் அறுவடை செய்த புல்லை சற்று நேரம் உலர வைத்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பில் 2 முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு மட்டும் அனுப்பி வளர்ப்பது. மற்றொன்று பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு அளித்து வளர்ப்பதாகும். மேய்ச்சல் மட்டும் உடைய கால்நடை வளர்ப்பு முறை தமிழகத்தில் அதிக அளவில் பின்பற்றப்படுகிறது.பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை அளிப்பது அடுத்த வகையாகும். மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிக புல்லை உட்கொள்வதால் கழிச்சல் நோய் உண்டாகும். நீண்ட வறட்சிக்கு பின் மழையில் முளைத்த புற்களை உண்பதால் வயிறு உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும். எனவே மழைக்காலத்தில் கால்நடைகளை அதிகாலை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கால்நடைகளை மேய்க்க வேண்டும்.

தீவனம் அளித்தல்

பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து, அறுவடை செய்து, அதை வெயிலில் உலர வைத்து, பின் அளிக்க வேண்டும். இதை கால்நடைகள் விரும்பி உண்ணும். மழைக்காலங்களில் கால்நடைகளின் உடலில் தட்பவெப்பம் குறைவாக காணப்படும். ஏனென்றால் வெயில் காலத்தில் நடக்கும் உடல் செயல்பாட்டு தன்மை, மழைக்காலத்தில் முற்றிலும் மாறுபடுகிறது. எனவே பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்திக்கு ஏற்ப அடர் தீவனத்தை அதிகம் அளிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு லிட்டர் பால் உற்பத்திற்கு 500 கிராம் அடர் தீவனமும், 50 கிராம் ஆடுகளின் இறைச்சி உற்பத்திக்கு தினசரி 100- 150 கிராம் அடர்தீவனமும் அளிக்க வேண்டும். எனவே, மழைக்காலத்தில் அடர்தீவனம் கண்டிப்பாக உற்பத்திக்கு ஏற்ப அளிப்பது அவசியம். 2 வேளைகளாக பிரித்து அடர்தீவனம் அளிப்பது முக்கியம். அதிகாலை மற்றும் இரவு நேரம் தீவனமளித்தலை தவிர்த்து, பகலில் அளிப்பதால், உற்பத்தி திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சேமிப்பு முறைகள்

மழைக்காலங்களில் அதிகமாக விளையும் பசுந்தீவனத்தை, பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனமாக மாற்றலாம். பின் வைக்கோல் அல்லது சோள தீவனத்தட்டையை, யூரியா சத்தூட்டிய வைக்கோலாக மாற்றினால், அதன் சத்துகள் அதிகரித்து, தீவனச்செலவு குறையும்.

அடர் தீவனமாக மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை, ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். தீவன மூட்டைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும். சுவற்றை ஒட்டி தீவன மூட்டைகளை வைக்கக்கூடாது. தீவன அறைக்குள் காற்று புகாமல் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அடர்தீவன தயாரிப்பை, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் செய்தல் நல்லது. தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு போன்றவை மற்றும் கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து பின் அரைத்து சேமிக்க வேண்டும்.

பூச்சி மருந்து தெளித்தல்

கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரமான தீவனம் அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீவன தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவன தொட்டிகளில் மீதமாகும் தீவனத்தை கால்நடைகள் உண்ணவில்லை என்றால், உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். பசுந்தீவனத்தை மழைக்காலத்தில் ஈரம் இல்லாதவாறு உலர்த்தி அளித்தல் வேண்டும்.

பசுந்தீவனத்தை நன்கு உதிர்த்து மண் மற்றும் புழுக்கள், பூச்சிகள் இல்லாதவாறு அளிக்க வேண்டும். மழைக்காலங்களில் கொசுக்கள், உண்ணிகள் மற்றும் புழுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. எனவே தீவனத்தொட்டியை சுற்றியும், கொட்டகையை சுற்றியும், பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தல் மிகவும் அவசியம். தண்ணீர் தொட்டியை வாரம் ஒரு முறை சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்தல் வேண்டும். முக்கியமாக பாசி பிடித்தலை தவிர்க்க வேண்டும். இவற்றை கால்நடை வளர்ப்போர் கடைபிடிக்க வேண்டும்.

Views: 2944

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

Comment by அசோலா விதைகள் விற்பனை​ பசுந்தீவன on June 3, 2017 at 3:55pm
0
அற்புத கால்நடை தீவனம் அசோலா
by Article Team
செப் 22, 2012
ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச்சிறந்த உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ வைக்கும் தாயாக விளங்கும் தாவரங்களுக்கு உன்னதம் மிகுந்த உயிர் உரமாகவும் அமைந்து வளம் தரக்கூடிய ஆதி தாவரமாகிய அசோலா என்னும் நீலப்பச்சைப்பாசி நீரில் வளரும் பாசி வகையாகும்.
செலவின்றி வளரும் அசோலாவை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 2 கிலோ வரை கொடுக்கலாம். இதன் காரணமாக 2 லிட்டர் பால் கூடுதலாக கிடைக்கும். புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை போன்ற தீவனங்களின் அளவை பாதியாக குறைத்துக் கொடுக்கலாம். மாடுகளின் சினைபிடிப்பு தன்மை மேம்படும். இதேபோல ஆடு, கோழி, மீன், முயல், பன்றி என அனைத்து கால்நடைகளுக்கும் செலவில்லாத தீவனமாக பயன்படுத்தி வளம் காண்பதுடன் அதிக வருமானமும் பெறலாம்.
அசோலா வளர்க்க தேவையான பொருட்கள் எவை என பார்ப்போம். பாலிதீன் சீட் 2 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்க வேண்டும். இதன் அளவு சிறிது கூட குறைய அமையலாம். பாலிதீன் சீட்டின் பரப்பளவில் ஒரு அடி நீள அகலம் குறைவான அளவில் அரை அடி உயரத்தில் மண் மூலமோ அல்லது செங்கல் மூலமோ பாத்தி அமைத்து, அதன் மீது பாலிதீன் சீட்டினை விரித்து பரப்ப வேண்டும். இப்பொழுது அரை அடி உயர தொட்டி போன்ற அமைப்பு கிடைத்துவிடும். இந்த பாலிதீன் தொட்டியினுள் ஒரு இன்ச் உயரம் அளவில் தோட்டத்து மண்ணைக் கொட்டி பரப்ப வேண்டும். 3 இன்ச் அளவு நீர் நிரப்ப வேண்டும். 10 கிலோ மாட்டுச்சாணத்தை கொட்டி நன்கு கரைத்து கலந்துவிட வேண்டும். இந்த தொட்டியினுள் அரை அல்லது ஒரு கிலோ அசோலா விதைகளை தூவி கலந்துவிட வேண்டும். கிரசர் பொடி (கருங்கல் பொடி) அரை கிலோ பரவலாக தூவி கலக்கிவிட வேண்டும். ஒரு வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா நிரம்பி வளர்ந்துவிடும். தினமும் 2 கிலோ அசோலா அறுவடை செய்யலாம். இந்த தொட்டியினை 50 சதவீதம் நிழல் கிடைக்கும் வகையில் மர நிழலில் அமைக்க வேண்டும்.
அறுவடை செய்த அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து மாடுகளுக்கு 2 கிலோ வரை தவிடு, புண்ணாக்குடன் கலந்துகொடுக்கலாம். ஆடுகளுக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரை கொடுக்கலாம். கோழிகளுக்கு தேவையான அளவு கொடுக்கலாம். மீன் வளர்க்கும் குளத்தில் அசோலாவை தூவிவிடுவதன் மூலம் தேவையான அளவு உட்கொள்ளும் மீன்கள் குறைந்த காலத்தில் அதிக எடை கொண்டதாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். தூய்மையான முறையில் வளர்க்கப்பட்ட அசோலாவை மனிதர்களாகிய நாமும் பொரியல், வடை, சூப் என பல வகையில் உணவாக சமைத்து உண்ணலாம். நெல்வயல்களில் இந்த அசோலாவை தூவிவிடுவதன் மூலம் பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவி வளர்ந்துவிடும். மண்ணில் கலந்து மக்கும் பொழுது சிறந்த உரமாக பயன்படும். மற்ற தாவரங்கள் அனைத்திற்கும் உரமாக பயன்படுத்தலாம். உரத்தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு பயன்பெறலாம். கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாட்டிலிருந்தும் விடுபடலாம். செல்வச் செழிப்பினை அடையலாம்.
இத்தனை சிறப்புகள் கொண்ட அசோலா என்னும் நீலச்பச்சை பாசி, தாவரங்கள் முதல் அனைத்து உயிர் களுக்கும் மிகச்சிறந்த செலவில்லாத அற்புத உணவாகவும், மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது.
எனவே விவசாயிகளும் ஆடு, மாடு, கோழி, ஈமு, புறா, மீன், மண்புழு வளர்ப்பு என பலரும் செலவில்லாத அசோலாவை வளர்க்கலாம்
Comment by Saheet Hussain on ஜனவரி 3, 2016 at 10:50am
Thanks ser

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2017   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service