இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் விதம்

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ, மேற்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும். 


1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து, கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் தயாரிக்க வேண்டும். நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். 5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும். 


5 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். இலைகளில் கரைசலின் நாற்றம் இருந்து கொண்டு இருக்கும். எனவே பூச்சிகள் நெருங்காது. ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக குலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும். இவ்விதம் தயார் செய்த பூச்சி விரட்டிக் கரைசலின் மூலம் பெரும்பாலான பூச்சிகளை விரட்டி விடலாம்.

Views: 2104

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

Comment by SUBRAMANIAN G on December 31, 2015 at 6:36am

very interesting and informative.

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2017   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service