நாட்டுக்கோழி வளர்ப்பு

பாரம்பரிய நாட்டுக் கோழியை மகளிர் குழுக்கள், வளரும் குழந்தைகள், வயோதி கர்கள்,பென்ஷன்தாரர்கள், வீட்டில் உள்ள பெண்கள், மனஅழுத்தம் உள்ளவர்கள், கடுமையான வேலைப்பளு உள்ளவர்கள், விவசாயிகள், தோப்புகள், தோட்டம், மேய்ச்சல் நிலம் உள்ளவர்கள், காலி இடம் உள்ளவர்கள் என யாவரும் வளர்க்கலாம்.


நாட்டுக்கோழி வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை: கழிச்சல் இல்லாமல், எச்சம் இடும் பகுதி வெள்ளையாக மிச்சம் ஒட்டி இருக்கக்கூடாது. ரோமம் கட்டி ஒட்டி இருக்கக்கூடாது. கோழியின் கால்கள் இளம் மஞ்சள் நிறத்துடன் கொண்டை சிவந்த நிறத்துடன், மூக்கு இளம் மஞ்சள் நிறத்துடன், பிடிக்கும்பொழுது திமிறிக் கொண்டு பலத்த சப்தம் இடவேண்டும். தொடைப்பகுதி நல்ல இறுக்கத்துடன் இருக்க வேண்டும். கொண்டை கருமை நிறத்துடன் இருக்கக்கூடாது. நல்ல சுறுசுறுப்புடன் ஓடியாடி மண்ணில் புரண்டு விளையாட வேண்டும்.
இப்படிப்பட்ட குணநலன்கள் கொண்ட நாட்டுக் கோழியாக பார்த்து வாங்க வேண்டும். முட்டை இடுகின்ற கோழிகள், அடைபடுத்த கோழிகள், முட்டை இட்டு கழிக்கின்ற கோழிகளை வாங்கக்கூடாது. வளர்ப்பதற்கு 3, 4 மாத வயது கோழிகளை வாங்க வேண்டும். உங்கள் இடத்தில் பழகி பெட்டையும் சேவலும் இனச்சேர்க்கை சேர்த்து முட்டையிட்டு அடைவைத்து குஞ்சு பொரிக்க வேண்டும்.
6 பெட்டைக்கு ஒரு சேவல் என்ற கணக்கில் திறந்த வெளியில் வெயிலில் மேய விட்டு வளர்க்கலாம். விற்பனைக்கு சந்தைகள், கறிக் கடைகள், திருவிழா காலங்கள், பண்டிகைகள் என ஏராளமான வழிவகைகள் விற்பனை வாய்ப்புள்ளது. சிறிய முதலீட்டில் பாரம்பரிய நாட்டுக் கோழியை வளர்க்கலாம்.
6 பெட்டை கோழிகள் 7, 8 மாத வயதில் முட்டை இட ஆரம்பிக்கும். ஒரு கோழி 10லிருந்து 13 முட்டைகள் வரை இடும். வருடத்தில் 6 முறை மட்டும் முட்டை இடுவதாக வைத்துக்கொண்டாலும் வருடத்தில் தோராயமாக 60-75 முட்டைகள் கிடைக்கும். ஒரு கோழிக்கு 9 முட்டை அடை வைத்து ஏழு குஞ்சுகள் பொறித்தாலும் இன்றைய நிலவரப்படி ஒரு கோழிக்குஞ்சின் விலை ரூ.25/- முதல் 40/- வரை.. (ஒரு நாள் வயது கோழிக்குஞ்சு).

நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த முழுமையான திட்ட அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கும். வளர்ப்பு முறை மற்றும் வளர்ப்பிற்கு பிறகு விற்பனை உட்பட அனைத்து வகையான தகவல்களுடன் கிடைக்கும். மேலும் உங்களது முதலீட்டிற்கு ஏற்ப நாட்டுக்கோழி பண்ணையினை இலாபமாக அமைப்பது குறித்து திட்டம் தயார் செய்து தரப்படுகிறது..

மேலும் விபரங்களுக்கு... 81444-81444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்..

Views: 1740

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

Comment by Arul Murugan on ஜனவரி 29, 2017 at 1:42pm

this news is very useful for me thank you

Comment by G P Mari on February 27, 2013 at 2:13pm

தகவலுக்கு நன்றி எனக்கு கரி கோழி பண்ணை வளர்க்க நல்ல வழி முறை சொல்லுங்கள் 

நான் கோழி வளர்ப்பதில் அனுபவம் அற்றவன் , எனகு நல்ல வழி காட்டுங்கள், நன்றி   

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2017   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service