சிறு தானியங்களின் சிறப்புகள்

சிறு தானியங்களின் சிறப்புகள்

         முன்பெல்லாம் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் நார்ச்சத்து உள்ள சிறு தானியங்களான சோளம்,கம்பு,கேழ்வரகு,சாமை,தினை,வரகு,குதிரை,வரகு,

காடைக்கன்னி போன்றவற்றை சாகுபடி செய்து அவற்றை உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்தனர்.இதனால் அந்தகாலத்து கிராம விவசாயிகள் வயது முதிர்ந்த காலத்திலும் ஆரோக்கியமாக எந்த நோய்களும் இன்றி திடகாத்திரமான உடல்வாகு பெற்று வாழ்ந்து வந்தனர்.காலப்போக்கில் நாகரிக வளர்ச்சி காரணாமாக அரிசியை முக்கிய உணவாக எடுத்துக் கொண்டு சிறு தானியங்களை ஒதுக்கிவிட்டனர்.இதனால் பலவகை நோய்களுக்கு ஆளாக நேரிட்டது.அதுமட்டுமின்றி சிறு தானிய உற்பத்தியும் வெகுவாக குறைய ஆரம்பித்துவிட்டது.ஆனால் தற்போது  நாம் அன்றாடம் உண்ணும் உணவில்  சிறு தானியங்களை சேர்க்க வேண்டும் என மருத்துவர்கள் முதற்கொண்டு அனைவரும் உணர ஆரம்பித்து விட்டனர்.

          தற்போது பெரிய நிறுவனங்கள் பிஸ்கட் மற்றும் சத்துமாவு தயாரிப்பதற்கு சிறு தானியங்களை விரும்பி வாங்குகின்றனர். கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் ருசிமிக்க உணவுப் பொருட்களை நாம் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.வரகு அரிசியில் இட்லி,தோசை, உப்புமா தயார் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.சிறு தானியங்களின் உணவுப் பொருட்கள் கோடை காலங்களில் நமது உடலைக் குளுமையாக வைத்துக் கொள்ள பயன்படும். எனவே வருங்காலங்களில் சிறு தானியங்களுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், சிறு தானியங்களுக்குப் பூச்சி நோய் மருந்துகள் தெளிக்க வேண்டிய அவசியமில்லை. இதை வறட்சியைத் தாங்கி, வளரும் தன்மை பெற்றது. வாய்ப்புகள் உள்ள அனைத்து விவசாயிகளும், சிறு தானியங்கள் சாகுபடி செய்து பயன்பெற வேண்டுகின்றோம்.   

 

 

Thanks to spic pannai seithi

Views: 197

Tags: சிறப்புகள், சிறு, தானியங்களின்

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

கட்டுரைகள் - தகவல்கள்

தேனீ வளர்ப்பு

Posted by maheshkumar on ஜனவரி 25, 2014 at 8:33am 0 Comments


Ads

© 2014   Created by Admin.

Badges  |  Report an Issue  |  Terms of Service