மாடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

விவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமுறைகளும் கீழே காணலாம்.

இந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்


கறவை இனங்கள்:

சாஹிவால்

அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.

சாஹிவால் பசு


பால் உற்பத்தி - கிராம சுழலில் : 1700 கிலோ - வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ

32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது

கறவை கால இடைவெளி - 15 மாதம்.கிர்

தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

கிர் வகை பசு


பால் உற்பத்தி - கிராம சூழல் : 900 கிலோ வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ

தார்பர்கர்


ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

தார்பர்கர்


பால் உற்பத்தி - கிராமசூழல் :1660 கிலோ – வணிக பால் பண்ணை: 2500 கிலோ

சிவப்பு சிந்து


பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

சிவப்பு சிந்து


பால் உற்பத்தி - கிராம சூழல் :1100 கிலோ – வணிக பால் பண்ணை : 1900 கிலோ

கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள்

ஓங்கோல்


ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - 1500 கிலோ

வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

ஓங்கோல்


ஹரியானா


கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்தியபிரதேசம்

பால் உற்பத்தி : 1140 - 4500 கிலோ

வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

கங்ரெஜ்


குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - கிராம சூழல் : 1300 கிலோ - வணிக பால் பண்ணை : 3600 கிலோ

36 - 42 மாதம் முதல் ஈனுகிறது.

கறவை கால இடைவெளி : 15 - 16 மாதங்கள்

காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.

டியோனி


ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

பண்ணை வேலைக்கான இனங்கள்

அம்ரித்மஹால்


கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.

அம்ரித்மஹால்


உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.

ஹல்லிகார்


கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

காங்கேயம்


தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.


உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.

அயல்நாட்டு கறவை இனங்கள்

ஜெர்சி


26 - 30 மாதம் முதல் ஈனுகிறது.

கறவை கால இடைவெளி : 13 - 14 மாதங்கள்

பால் உற்பத்தி - 5000 - 8000 கிலோ

ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது.

ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது.

இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.

Holstein ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்


இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.

பால் உற்பத்தி 7200 - 9000 கிலோ

பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும்.


சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.

டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.

எருமை இனங்கள்

முர்ரா


ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - 1560 கிலோ

சராசரியாக ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது

ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 - 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.

கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்

சுர்த்தி


குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி : 1700 - 2500 கிலோ

ஜப்ராபதி:


குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது
பால் உற்பத்தி - 1800 - 2700 கிலோ

நாக்பூரி


நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)
பால் உற்பத்தி : 1030 - 1500 கிலோ

கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை

 • கறவை மாடுகளின் தேர்வுகறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
 •  மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.
 •  மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.
 •  கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது. எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.
 •  தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.
 •  யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும்.
 •  அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.
 •  ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள்

 • கவர்ச்சியான தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
 • உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.
 •  கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.
 • மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.
 •  மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.
 •  மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.வணிக ரீதியான பால் பண்ணைக்கான இனங்களின் தேர்வு- ஆலோசனைகள்

இந்திய சூழ்நிலையில், ஒரு பால் பண்ணைக்கு குறைந்த அளவு 20 மாடுகள் (10 பசு, 10 எருமை) இருக்க வேண்டும். இதனை 100 என்ற எண்ணிக்கைக்கு நீட்டிப்பு செய்யலாம் (50 : 50 அல்லது 40 : 60 என்ற விகிதத்தில்).

எனினும் இதற்கு மேல் அதிகரிக்கும் பொழுது, உங்களது சக்தியையும் விற்பனை திறனையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள். சுகாதார அக்கரையுடைய நடுத்தர மக்களுக்கு, குறைந்த அளவு கொழுப்புடைய பால் தேவை.

எனவே கலப்பின மாடுகள் மற்றும் எருமைகளை தனி வரிசைகளில் ஒரே கொட்டகையில் வைத்து கலப்பு பண்ணையை வைக்க வேண்டும்.

உடனடியாக பால் விற்பனை செய்ய, அதிக தேவை இருக்கும் விற்பனை இடங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வகைப் பாலையும் கலந்து தேவைக்கேற்ப விற்பனை செய்யவும்.

ஹோட்டல் மற்றும் சில பொதுவான வாடிக்கையாளர்களுக்கு (30%) எருமைப்பால் தேவைப்படும். மருத்துவமனைகள் பசும்பாலை விரும்புகின்றன.

வணிக ரீதியான பண்ணைக்கான மாடு . எருமைகளை தேர்வு செய்யும் முறை

பசுமாடுகள்

ஒரு லிட்டர் பாலிற்கு ரூ.1,200 - ரூ.1,500 என்ற விலையில் நல்ல தரமான மாடுகள் சந்தையில் கிடைக்கிறது. (நாளுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய மாட்டின் விலை ரூ.12,000 - 15,000) நன்றாக பராமரிக்கும் பொழுது, ஒவ்வொரு 13-14 மாத இடைவெளியில், கன்று ஈனுகிறது. கறவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நன்றாக பால் தரக் கூடிய கலப்பினங்கள் (ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி கலப்பினங்கள்) இந்திய சூழலுக்கு ஏற்றவை ஆகும்.

பசும்பாலில் 3-5.5% கொழுப்பு உள்ளது. இது எருமைப் பாலைவிட சற்று குறைவாக உள்ளது.

எருமைகள்

மாட்டுப் பண்ணைக்கு ஏற்ற முர்ரா மற்றும் மேசனா போன்ற எருமை இனங்கள் உள்ளன.

பசும்பாலைவிட எருமைப்பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இது வெண்ணை மற்றும் நெய்க்காக அதிகம் தேவைப்படுகிறது. இந்திய வீடுகளில அதிகம் அருந்தப்படும் டீ தயாரிப்பதற்கும் எருமைப் பால் விரும்பப்படுகிறது.

எஞ்சிய பயிர் கழிவுகளைக் கொண்டு எருமையை வளர்க்கலாம். இதனால் செலவு குறைகிறது.

எருமைகள் ஈனுவதற்கு தாமதமாகிறது. மேலும் கறவை கால இடைவெளி 16-18 மாதங்கள் ஆகிறது. காளைக் கன்றுகளுக்கு அதிக மதிப்பு இல்லை.

எருமைக்கு குளிர்ச்சியான சூழல் தேவை.

ஆதாரம்: பெய்ஃப் டெவலப்மென்ட் ரிசர்ச் பெளன்டேசன், பூனா. இந்தியா

Views: 988

கருத்துரை

You need to be a member of வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join வேளாண்மைத் தகவல் ஊடகம்

Comment by Thiyagarajan on June 7, 2017 at 8:08pm

Gir , Sahiwal or kankrej calves tamilnadula ketaykuma

Comment by s.kiruthika on December 5, 2012 at 2:36pm

thank you madem,

                          nanga mattu pannai vaipatharkana muyarchil eedu pattullom antha samayam ungalathu mail parthathum migavum mahilkirom

உங்களுக்கான பரிந்துரைகள்...

Ads

நிகழ்ச்சிகள்

உழவர்கள் தகவல் மையம்

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்.. மேலும் விபரங்களுக்கு.... அழைக்கவும்...

7 708 709 710

© 2018   காப்புரிமைக்குட்பட்டது.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service