விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

 

சாண எரிவாயு பற்றிய தகவல்கள்.

அதனை அமைக்கும் முறை, பராமரிப்பு, முதலிய தகவல்களை வெளியிட வேண்டிக்கொள்கிறேன்.

இதன் தகவல்கள் அடங்கிய வலைப்பக்கம் உண்டெங்கில் அதனையும் குறிப்பிடுக.

 

நன்

Views: 137

Reply to This

Replies to This Discussion

உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி அக்கா
அரசு அங்கீகரித்துள்ள சாண எரிவாயுக் கலன்களின் வடிவமைப்புகள்

தற்பொழுது மத்திய அரசு கீழ்க்கண்ட, நான்கு விதமான சாண எரிவாயு சாதனங்களை, மான்யம் பெறுவதற்கு அங்கீகரித்துள்ளது.

1. கிராமத் தொழில் ஆணைக்குழு இரும்பு டிரம் எரிவாயு கலன்
2. கதர் கிராம ஆணைக்குழு ஃபைபர் டிரம் எரிவாயு கலன்
3. கான்கிரீட் சுவர் டிரம் கலன் (பெரோ சிமெண்ட் வடிவம்)
4. பந்து வடிவ நிலையான கூடார கலன் (தீன பந்து வடிவம்)

இவைகள் அமைக்க கிராமத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்ற கொத்தனார்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தவித எரிவாயு கலனில் கட்டிடத்தை எளிதில் கட்டி முடித்து விடலாம். தரமான டிரம்மை கிராம அளவில் பரிசோதித்து வாங்கவேண்டும்.

கதர் கிராமத் தொழில் ஆணைக் குழுவின் இரும்பு டிரம் மற்றும் ஃபைபர் டிரம் எரிவாயுக் கலன்

அமைப்பு

* சாண எரிவாயுக் கலனில் போதிய அளவில் ஒரு ஜீரணிப்பான் இருக்கிறது.
* மாட்டுச்சாணம், மூத்திரம், மலம் மற்றும் கால்நடை தீவனத்தில் மீதமுள்ளதையோ அல்லது காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டவற்றை அது நன்கு நொதிக்க வைக்கிறது.
* இந்த ஜீரணிப்பானுக்கு மேலே அதை மூடிக்கொண்டு வாயு பீப்பாய் இருக்கிறது. நொதிக்க வைத்தல் மூலம் வரும் வாயு இதில் சேருகிறது. சரியான அழுத்தத்தில் ‘வாயு குழாயில்’ இது வாயுவை செலுத்துகிறது.
* வாயு உபயோகமாகும் இடங்களுக்கு அதாவது சமையல் ஸ்டவ்கள், கோபர் காஸ் விளக்குகள், காஸ் என்ஜின்கள் ஆகியவைகளுக்கு பிரஷ்ஷர் குறையாமல் வாயு குழாய் மூலம் செலுத்துகிறது.
* கோபர் கேஸ் ஸ்டவ்கள், கோபர் காஸ் விளக்குகள், இன்ஜின்கள் ஆகியவைகளுக்கு வேண்டிய விசேஷ வடிவமைப்பில் காஸ் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சாண எரிவாயு கலனை இயக்குவது எப்படி
* ஜீரணிப்பான் என்று கூறப்படும் நொதிக்கலவைக்கும் தொட்டி, செங்கல், சிமெண்ட், கலவை ஆகியவைகளால் கட்டப்படுகிறது அல்லது கட்டிடம் கட்டுவதற்குக் கிடைக்கும் மற்ற உபயோகமான பொருள்களால் கட்டப்படுகிறது. லேசான எஃகுத் தகடுகள் அல்லது ஃபைபர்களாஸ் முதலியவற்றைக் கொண்டு வாயு பீப்பாய் செய்யப்படுகிறது. ஃபைபர் கிளாஸ் அழுத்தப் பாலியஸ்டரால் செய்யப்பட்ட வாயு பீப்பாய்களுக்கு முதலில் அதிகமாகச் செலவாகும். ஆனாலும் பின்னால் அவைகளுக்கு வர்ணம் பூசவேண்டிய அவசியம் இருக்காது. அவைகளில் துருப்பிடிக்கவும் செய்யாது.
* காஸைக் கொண்டு செல்வதற்கான குழாய்கள் இரும்பினாலோ அல்லது கருப்பு பாலித்தீனாலோ செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனுடைய உள்விட்டம் 1 அங்குலம் அல்லது 32 மில்லி மீட்டருக்குக் குறையக் கூடாது. தகட்டின் கனம் 4.7 மில்லி மீட்டருக்கு குறையக்கூடாது. பாலித்தீன் பைப்புகள் மலிவானவை, பொருத்துவதும் எளிது. வீட்டுக்குள் 3/4 அங்குலம் அல்லது 1/2 அங்குலம் ஜி.ஐ பைப்புகள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
* கதர் கிராமத் தொழில் கமிஷன் அங்கீகாரம் பெற்ற அடுப்புகள் அல்லது விளக்குகள் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அவைகளின் திறன் ஏற்கனவே சோதிக்கப்பட்டு நிரூபணமானதாகும்.
* சாணத்தையும் கால்நடைகளின் மூத்திரத்தையும் சேகரித்து கலவை தொட்டியில் அவைகளை நிரப்பி, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி உள்குழாய் வழியாக உள்ளே செலுத்துவது. இவ்வாறு இயந்திரத்திற்குள் போகும் கலவைக்குச் சமமான அளவு சாண கரைசல் வெளியே வரும். அது பக்குவமாகி பலன் தரக்கூடியதாக இருக்கும். அந்தக் கலவையை உரக்குழியில் உடனே விட்டு, பண்ணைக் கழிவுகள் அல்லது வீட்டுக் குப்பைகளை அடுக்கடுக்காகப் போட்டு மூடிக்கொண்டு வரவேண்டும்.



தீனபந்து எரிவாயுக் கலனின் அமைப்பும் செயல்படும் விதமும்

* கலனின் அடிப்பாகம் கால்பந்து வடிவில் கான்கிரீட் கலவையில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டிடச் செலவு குறைக்கப்படுகிறது. அதாவது கான்கிரீட் குழிவாகப் போடப்படுவதால் மேலே கட்டப்பட வேண்டிய கட்டிடத்தின் அளவு (கொள்ளளவு) குறைக்கப்படுகிறது. அதன்பின் கான்கிரீட் மேலே இருந்து அரைப்பந்து வடிவில் முடிந்து விடுவதால் செலவு குறைக்கப்படுகின்றது. அளவுகளில் தவறு எற்பட வாய்ப்பில்லை.
* சாணம் ஊற்றுவதற்காக 6 அங்குல குழாய் பொருத்தப்பட்டு அதன் மேல் சாணக்கரைசலைத் தயாரிப்பதற்கான சிறிய கரைக்கும் தொட்டியைக் கட்டிக் கொள்ளலாம்
* சாணம் வெளிவரும் தொட்டிபெரிய அளவில் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் எரிவாயு அதிகமாக உற்பத்தியாகும் பொழுது அதிக அளவில் பொங்கிக் கூடாரத் தொட்டியிலிருந்துசாணக் கரைசல் வெளிவரும் தொட்டியில் ஏறி நிற்கும்.
* இவ்வாறு சாணம் வெளிவரும் தொட்டியில் உள்ள சாணத்தின் மட்டம், எரிவாயுவை எரிக்க ஆரம்பித்தால் வெளிவரும் தொட்டியிலுள்ள சாணக் கரைசல் கீழே இறங்க ஆரம்பிக்கும். இங்ஙனம் சாணம் வெளிவரும் தொட்டியில் சாண மட்டம் ஏறி இறங்குவதிலிருந்து சாதனம் நன் முறையில் இயங்குவதையும், எவ்வளவு எரிவாயு உற்பத்தியாகின்றது அல்லது இருக்கிறது என்பதை உணரலாம்.
தீனபந்து வடிவக் கலனின் சிறப்பியல்புகள்
* கிராமத்தில் கிடைக்கக்கூடிய செங்கல், சிமெண்ட், மணல் மற்றும் ஜல்லிக் கற்களால் அடுப்பு கட்டப்படுகிறது.
* தரைக்கடியிலேயே கட்டி முடிக்கப்படுகிறது.
* நீடித்த உழைப்பு கொண்டது.
* பராமரிப்பு செலவே கிடையாது.
* பயிற்சி பெற்ற கிராமத்து கொத்தனார்களே எளிதில் கட்டக்கூடியது.
* குளிர் காலத்தில் வாயு உற்பத்தி அதிகமாகக் குறைவதில்லை.
* குறைந்த செலவில் கட்டப்படக்கூடியது.



நிலையான கூடார மாடல்
சாதனம் அமைக்கும் பொழுது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்

* சரியான கொள்ளளவு தேர்வு செய்யப்பட்ட வேண்டும்.
* தோண்டிய மண், குழிக்கு அப்பால் 1/2 மீட்டர் தூரத்தில் கொட்டப்பட வேண்டும்.
* கான்கிரீட் கலவை சுத்தமான, இதற்கென தயார் செய்யப்பட்ட இடத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.
* முதல் தரமான சேம்பர் செங்கற்களையே பயன்படுத்த வேண்டும்.
* சுவற்றின் வெளிப்புறம் மண் அல்லது மணலால் நிரப்பப்பட வேண்டும்.
* சுவற்றின் மேற்பகுதியின் சுற்றுப்புறத்தில் விடப்படும் இடைவெளியில் மண் மற்றும் தூசு போன்றவைகளை விழாத வண்ணம் பார்த்து கொள்ளவேண்டும்.
* இந்த இடைவெளியில் 1 : 3 சிமெண்ட் கலவையால் நீர் அதிகம் சேர்க்கப்பட்ட நிலையில் ஊற்றப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.
* சாணம் உட்புகும் / வெளிவரும் தொட்டியின் வெளிப்புறச் சுவர்கள் பொய் தளத்தை பிரித்த பிறகே கட்டப்பட வேண்டும்.
* பொய்த்தளத்தை பிரிப்பதற்கு வசதியாக இரு தற்காலிக தூண்கள் சாணம் உட்புகும், வெளிவரும் தொட்டிகளுக்காக விடப்பட்ட துளைகளின் அருகாமையில் அமைக்கப்பட வேண்டும்.
* பொய்த்தளம் (மண்டபம்) கட்டும் பொழுது சரிவு ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மண்டபத்தின் வெளிப்பூச்சு உட்பூச்சு ஆரம்பித்த அந்த நாளிலேயே முடிக்கவேண்டும்.
* செங்கற்களை பொய்த்தளத்தின் மீது அடுக்கும் பொழுது வாயு வெளிவரும் குழாயை சிறிய கம்பிகளை வெல்டு செய்து மண்டப மையத்தில் பொருத்தி விட வேண்டும்.
* சாணம் உட்புகும் / வெளிவரும் தொட்டிகள் கான்கிரீட் அல்லது மரப் பலகைகள் கொண்டு மூடி வைக்கவேண்டும்.
* செங்கல் கூடாரத்தை மணல் அல்லது மண் கொண்டு மூடி விடவேண்டும்.
* கரிசல் மண் போன்ற பிரச்சனைக்குரிய இடங்களில் சாண எரிவாயு சாதனம் அமைக்கும் பொழுது 2 அடி உயரத்திற்கு ஒரு முறை ஆர்.சி.சி கான்கிரீட் பெல்ட் அமைத்து கட்டவேண்டும்.


கட்டி முடித்த சாதனத்தை இயக்கும் முறை

* இரண்டு மூன்று வாரங்களுக்கு சாதனத்தை நீர் ஊற்றி நன்கு பதப்படுத்திய பிறகு சாதனத்தை நிரப்ப ஆரம்பிக்க வேண்டும்.
* சாதனத்தை ஒரே நாளில் நிரப்ப முயலுவது கடினம். ஒரு மாத சாணத்தை சேமித்து வைத்து உலர்ந்த சாணத்தை நீக்கிவிட்டு நிரப்பலாம்.
* சாணத்தை நீருடன் 1:1 என்ற விகிதத்தில் நிரப்ப வேண்டும்.
* கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய வடிவமைப்பாக இருந்தால் சாணக் கழிவு வெளிவரும் குழாய் நிரம்பி வழியும் வரை ஊற்றலாம். நிலையான கூடார வடிவமைப்பாக இருந்தால் மண்டபத்தின் அடிமட்டம் (சாணம் வெளிவரும் தொட்டி விரிவடையும் மட்டம்) வரை தான் ஊற்றலாம்.
* வாயு வெளிவரும் குழாயை மூடி விட வேண்டும். சாணம் நிரப்பிய இரு வாரங்களில் வாயு உற்பத்தி தொடங்கும் இதற்கு மேலும் சாணக் கரைசலை ஊற்றக் கூடாது.
* நிலையான கூடார அமைப்பாக இருந்தால் ஓரிரு வாரங்களில் சாணம் உட்புகும் வெளிவரும் தொட்டிகளில் சாண மட்டம் தானாக உயருகிறதா என்று பார்க்க வேண்டும். இவ்வாறு சாண மட்டம் உயர்ந்து கொண்டே வந்து சாணம் வெளிவரும் தொட்டியின், மேல் மட்டத்தில் விடப்பட்ட வாயில் வழியாக வெளியேற ஆரம்பித்து விட்டால் சாதனம் சரியாக இயங்க ஆரம்பித்து விட்டது என்று அறியலாம்.
* சாதனம் சரியாக இயங்குகின்றதா எனத் தெரியவேண்டுமானால் காலையில் சாணம் வெளிவரும் தொட்டியில் சாண மட்டம் உயர்ந்த இடத்தில் ஒரு கோடு போட்டு வைக்கவேண்டும். பின்னர் வாயுவை சமையலுக்குப் பயன்படுத்தியவுடன் மட்டம் தானாக இறங்க ஆரம்பிக்கும். அவ்வாறு ஒரு அடி முதல் இரண்டு அடிவரை இறங்க ஆரம்பித்தவுடன் குறித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாலையில் மட்டம் தானாகவே உயரவேண்டும். வாயுவைப் பயன்படுத்தியவுடன் மட்டம் இறங்கிவிடும். இவ்வாறு நடைபெற்றால் சாதனம் நல்லமுறையில் செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
* கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணைய வடிவமைப்பாக இருந்தால் வாயு உற்பத்தி ஆனவுடன் இரும்புக் கொப்பரை மேலே சென்றுவிடும். நாம் வாயுவைப் பயன்படுத்திய உடன் இரும்புக் கொப்பரை கீழே இறங்கிவிடும். இந்த நிலையைக் கொண்டு சாதனம் நல்ல முறையில் இயங்குகின்றது என்று அறியலாம்.
காஸ் இயந்திரம் (சாண எரிவாயுக் கலன்) நிறுவுவதற்கான முன்னோடித் தேவைகள

மாடுகள் எண்ணிக்கை

காஸ் இயந்திரம் நிறுவ விரும்பும் தனிப்பட்டவர் அல்லது ஸ்தாபனத்திடம் போதுமான கால்நடைகள் இருக்கவேண்டும். அதுவும் கூடியவரை தொழுவத்தில் நிற்கக்கூடியவைகளாக இருக்கவேண்டும். மேய்ச்சலுக்குப் போகக்கூடிய கால்நடைகளாக இருந்தால், மேய்ச்சல் நிலத்திலேயே சாணம் விழுந்துவிடும். அவைகளிடமிருந்தும் கூட இரவு நேரத்தில் தொழுவத்தில் சாணம் கிடைக்கும். ஆனால் அப்படி எவ்வளவு சாணம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் 45 கிலோவுக்கு குறையாத பசுஞ்சாணம் கிடைக்காவிட்டால், மிகமிகச் சிறிய காஸ் இயந்திரம் நிறுவுவது கூடக் கட்டுப்படியாகாது. அந்த அளவிலாவது சாணம் கிடைத்தால், இரண்டு கன மீட்டர் (60 கன அடி) காஸ் இயந்திரத்தை நிறுவ முடியும்.

ஒரு நடுத்தரப் பசு அல்லது எருமை அல்லது காளை சராசரியாக நாள்தோறும் போடும் பசுஞ்சாணம் 10 கிலோ என்று வைத்துக் கொள்ளலாம். கொங்கணம் அல்லது அஸ்ஸாம் அல்லது மற்ற மலைப் பகுதிகளில் உள்ளது போல் மிகச்சிறிய மாடாக இருந்தால், சாணம் மிகவும் குறையும். மிகப்பெரிய எருமைகள் ஒரு நாளைக்கு 20 கிலோ வரை சாணம் போடக்கூடும். ஆனால் இவைகளெல்லாம் தொழுவத்தில் இருக்கும் கால்நடைகளுக்கான கணக்குதான். இதைத் தவிர முற்றிலும் மலத்தைக் கொண்டே உரம், காஸ் தயாரிக்கக்கூடிய இயந்திரங்களும் இருக்கின்றன. அவைகளில் மிகச்சிறிய காஸ் இயந்திரத்திற்குக் குறைந்தது வயது வந்த 60 பேர் இருக்க வேண்டியது அவசியம். விடுதியில் அல்லது பொது கக்கூஸ் இருக்கும் இடங்கள் போன்றவற்றில் தான் இது சாதாரணமாக சாத்தியமாகும். அங்கும் கூட சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு ஒரு முக்கியமான அம்சமாகும். ஒருவர் மலம் கழிக்கும் போது ஒரு லிட்டருக்கும் மேல் தண்ணீர் செலவழிக்கக் கூடாது. இல்லையேல் தண்ணீர் அதிகமாகி நன்றாக நொதிப்பதில்லை.

எத்தனையோ அம்சங்கள் வேறுபடுவதால், இத்தனை மனிதர்கள் அல்லது கால்நடைகள் தாம் வேண்டுமென்று சரியாகக் கூறமுடியாது. ஆனாலும் இரண்டு கனமீட்டர் காஸ் இயந்தித்தை நிறுவுவதற்குச் சராசரியாக சுமார் 3 கால்நடை அல்லது 60 பேர் அவசியமாகும் என்று சொல்லலாம். எண்ணிக்கை அதிகமாகும் அளவிற்கு பெரிய காஸ் இயந்திரம் நிறுவலாம்.

சாணம் அல்லது மலம் தவிர, தோலுரிக்கும் இடங்களில் கழிவுப் பொருள்கள் போதுமான அளவு கிடைப்பதாக இருந்தால், அங்கும் காஸ் இயந்திரம் நிறுவமுடியும். அப்படிப்பட்ட இடங்களில், இறந்த கால்நடைகளின் வயிற்றில் இருந்த சாணம், தோல் உரிக்கும் போது கிடைக்கும் கழிவுப் பொருள்கள் ஆகியவைகளை காஸ் இயந்திரத்தில் போடலாம். பன்றி வளர்க்கும் இடங்கள், கோழிப் பண்ணைகளில் அவைகள் போடும் மலம், எச்சம் ஆகியவை போதுமான அளவு கிடைப்பதாக இருந்தால் அவற்றை இதற்காக உபயோகப்படுத்தலாம்.


இட தேவைகள்

காஸ் இயந்திரத்தை நிர்மாணிக்கவும், வெளியே வரும் கழிவை நிரப்புவதற்கான குழிகள் வெட்டவும் போதுமான இடம் வேண்டும். தொழுவத்திற்கு மிக அருகிலும், மற்றொரு புறம் காஸ் உபயோகமாகும் இடத்திற்கு உபயோகப்படுத்துவதற்காக, சாணத்தை நீண்ட தூரம் கொண்டுவருவது விவேகமாகாது. சாதாரணமாக இந்த தூரம் 20 மீட்டருக்கு மேல் போகாமல் இருப்பது நல்லது.

காஸ் இயந்திரம் வெடிக்கும் அபாயம் எதுவும் இல்லை என்பதும், துர்நாற்றம் வீசும் அல்லது ஈ பரவும் பிரச்சனை எதுவும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். ஆகையால் வீட்டுக்கு அருகில் காஸ் இயந்திரத்தை நிறுவுவதற்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை.

ஏற்கனவே குறிப்பிட்டது போல, வெளியேவரும் கழிவைக் கம்போஸ்ட் உரமாக்குவதற்குப் பல குழிகள் தோண்டுவதற்கு போதுமான இடம் காஸ் இயந்திரத்தின் அருகில் இருக்கவேண்டும்.

ஆனாலும் ஒரு கிணற்றுக்கு 15 மீட்டர் தூரத்திற்குள் காஸ் இயந்திரத்தை நிர்மாணிக்கக்கூடாது. ஏனெனில், சில சந்தர்ப்பங்களில், சாணம் அல்லது மலத்தின் கலங்கல் ஊறி கிணற்றில் கலக்கும் அபாயம் இருக்கிறது.


தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர் கிடைக்க வேண்டும். சாதாரணமாக காஸ் இயந்திரத்தில் ஊற்றப்படுவதற்கு முன்னர் சாணம் சம அளவு தண்ணீரில் கலக்கப்படுகிறது. ஆகவே, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டால் காஸ் இயந்திரத்தைப் பற்றி நினைத்துக் கூடப்பார்க்க முடியாதென்பது இயற்கையே.


காஸ் பயன்பாடு

காஸ் இயந்திரத்தில் உள்ள ஜீரணிப்பானிலிருந்து கிடைக்கும் உரம் பெரும் மதிப்புள்ளது தான் என்றாலும், உற்பத்தியாகும் காஸ் ஏதாவது ஒரு வழியில் பயன்படுவதற்கான வழிகாண வேண்டும். வீட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ள கோசாலை அல்லது மாட்டுத் தொழுவத்தில் காஸ் இயந்திரம் இருந்தால், அதிலிருந்து உற்பத்தியாகும் காஸை எரிபொருளாகப் பயன்படுத்துவது கஷ்டமானதாய் இருக்கும். அதே இடத்தில், இந்த காஸை ஒர் என்ஜினை இயக்குவதற்குப் பயன்படுத்துவதற்காக இருந்தாலும், அதற்கு வேண்டிய காஸ் உற்பத்தி செய்யப் போதுமான சாணம் கிடைக்கவேண்டும். ஆகையால், காஸ் உபயோகமாகக் கூடியவாறு பக்கத்தில் குடியிருப்புகள், பொது சமையற்கூடம், அல்லது கோசாலையில் பால் கொதிக்கும் ஏற்பாடு ஆகியவை இருக்கின்றனவா என்று பார்த்து திட்டமிட வேண்டியது அவசியம்.
புள்ளி விவரம்

ஒரு மாட்டிலிருந்து எவ்வளவு (பசுஞ்) சாணம் கிடைக்கிறது?

இதைப்பற்றி திட்டவட்டமான கணக்குக் கொடுக்கமுடியாது. மாடு பெரியதா, சிறியதா, அது உண்ணும் தீனி, அது தொழுவத்தில் கட்டப்படுகிறதா அல்லது மேய்ச்சல் நிலத்திற்குப் போகிறதா என்பதையெல்லாம் பொறுத்தது அது. ஆனாலும் தொழுவத்தில் உள்ள குறிப்பிட்ட வயது வந்துள்ள நடுத்தர மாடுகளின் விஷயத்தில் கீழ்க்கண்ட கணக்கைச் சராசரியாக வைத்துக் கொள்ளலாம்.

எருமை = ஒரு நாளைக்கு சுமார் 15 கிலோ
காளை அல்லது பசு = சுமார் 10 கிலோ
கன்றுகள் = சுமார் 5 கிலோ
ஒரு கிலோ பசுஞ் சாணத்திலிருந்து உற்பத்தியாகும் (காஸ்) வாயு 1.3 கன அடி.

சாண எரிவாயு சாதனத்தின் அளவு

எத்தனை மாடுகள் அல்லது ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த இடத்திலும் ஒரு சாண எரிவாயு சாதனத்தின் அளவைத் தீர்மானிக்க முடியும். மிகச் சிறிய சாண எரிவாயுக் கலனின் அளவு 2 கன மீட்டர். இதற்கு 2-3 மாடுகள் வேண்டும்.


சாண எரிவாயு சாதனத்தின் அளவு
சமையல் செய்ய- ஒருநபருக்குஒருநாளைக்கு 8 கன அடி அல்லது 0.227 கன மீ.
விளக்குஎரிக்க100மெழுகுவர்த்தி ஒளியுள்ள விளக்குக்கு- 4.5 கன அடி அல்லது 0.127 கன மீ
என்ஜின்களை இயக்க - 15 கன அடி அல்லது 0.425 கன மீ.
குறைபாடுகளும் அவற்றினை நிவர்த்தி செய்தலும்

சரியான முறையில் பராமரித்து வந்தால் சாண எரிவாயுக் கலன் பல ஆண்டுகளுக்கு பழுதுபடாது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சாண எரிவாயு கலனின் சொந்தக்காரர்களின் அனுபவம் இதுவே.

1. செரிக்கும் பகுதி சுவரில் விரிசல் ஏற்படுதல், மற்றும் அடித்தளம் இறங்குதல் : சாண எரிவாயு கலத்தின் செரிக்கும் பகுதி விரிசல் ஏற்பட்டால் மற்றும் அடித்தளம் இறங்கினால் சுவரின் பின் பகுதியில் மணல் சரியாக நிரப்பப்படாமல் இருக்கலாம். இவ்வகையான பழுதை சரிசெய்ய சுவரின் பின்புறம் சரியாக மணலால் நிரப்பப்பட வேண்டும்.

2. மத்தியில் உள்ள பிரிக்கும் சுவர் இடிதல் (இரும்பு வாயு கொள்கலம் உள்ளதில்) : சுவரின் இருபக்கமும் உள்ள சாணக் கரைசலின் சமமான அழுத்தம் இல்லாமல் இருந்தால் மத்தியில் உள்ள பிரிக்கும் சுவர் இடிந்து விடும். இதை சரிசெய்ய ஆரம்பத்தில் சாணக் கரைசலை பிரிக்கும் சுவருக்கு இருபக்கமும் சமமாக நிரப்பி வரவேண்டும்.

3. வாயு ஒழுக்கு : இரும்பு வாயுக் கொள்கலன் சரியாக வெல்டு செய்யாமல் இருந்தாலும். வாயு சேகரிக்கும் கூடு சரியாக கட்டப்படாமல் இருந்தாலும் வாயு ஒழுக்கு ஏற்படும். இதை சரி பார்த்து பழுது பார்க்கவேண்டும்.

4. வாயு குழாயில் தண்ணீர் தங்குதல்
தண்ணீர் நீக்குவது சரியாகப் பொருத்தாமல் இருந்தால் வாயுக் குழாயில் தண்ணீர் தங்கி விடும். இதை சரி செய்ய வாயுக் குழாய்களைப் பொருத்துதல் வேண்டும்.

5. முதலில் சாணக் கரைசலை நிரப்பியபின் வாயு வராமை:
சாணக்கரைசலை நிரப்பியபின் வாயு வர வாய்ப்பில்லை. கரைசலை ஊற்றி 2 அல்லது 3 வாரங்கள் வரை பொறுத்திருந்து பின்பு வாயுவை உபயோகிக்கலாம்.

6. இரும்பு கொள்கலம் உயராமல் இருத்தல் மற்றும் உள்நுழையும் வெளிவரும் பகுதியில் சாணக்கரைசலின் மட்டம் உயராமல் இருத்தல் சாணக் கரைசல் போதுமான அளவு இல்லாமல் இருந்தாலும் கொள்கலத்திலும் குழாயிலும் வாயு ஒழுக்கு ஏற்பட்டாலும் கனமான அடை இருந்தாலும் மேற்கண்ட குறைகள் எற்படும். இதை சரி செய்ய தேவையான கரைசலை நிரப்ப வேண்டும். பின்பு அதை சரிபார்க்க வேண்டும். கொள்கலத்தைச் சுற்றி மூங்கில் கொண்டு கரைசலைக் கலக்க வேண்டும்.

7. சாதனத்தில் வாயு இருந்தும் அடுப்புக்கு வராதிருத்தல்:
வாயுக் குழாய் அடைத்தாலும், தேவையான அழுத்தம் இல்லாததாலும், வாயு வெளிவரும் வழியில் ஆடை அடைத்தாலும் வாயு வராது. இதை சரி செய்ய குழாயில் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். வாயுக் கொள்கலத்தின் மேல் சுமையை அதிகரிக்கவேண்டும். வெளிச் செல்லும் வால்வை திறந்து தண்ணீர் அழுத்தத்தால் சரி செய்யவேண்டும்

8. வாயு எரியாமல் இருத்தல்:
முதலில் வரும் வாயுவில் கரியமிலவாயு கலந்து இருக்கும். அதனால் வாயு எரிய வாய்ப்பிருக்காது. சாணக் கரைசலை சரியாகக் கலந்து ஊற்றாவிட்டாலும் வாயு வராது. இதற்கு சரியான விகிதத்தில் தூசி மற்றும் குப்பை கூளங்கள் இல்லாத சாணத்தை கரைத்து ஊற்ற வேண்டும்.

9. அடுப்பிற்கு மேல் அதிக உயரத்தில் சுவாலை எரிதல்: வாயு அழுத்தம் அதிகம் இருந்தாலும் அல்லது அடுப்பில் வாயு வரும் குழாயில் கரி பிடித்திருந்தாலும் அடுப்பிற்கு மேல் அதிக உயரத்தில் சுவாலை எரியும். வாயு வெளிவிடும் வால்வை சரிசெய்து அடுப்பை சுத்தம் செய்தால் இக்குறை நீங்கும்.

10. சுவாலை இறங்கி அணைதல்:
தேவையான அழுத்தம் இல்லாமல் இருந்தால் சுவாலை இறங்கவும், அணையவும் வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் வாயுவின் அளவு குறைவாக இருந்தால் இவ்வாறு ஏற்படும். இதற்கு வாயுவின் அளவை சரிபார்க்க வேண்டும்.

11. வாயு கொள்கலத்தையும் குழாயையும் அரித்தல்:
பராமரிப்பு சரியில்லாமல் இருந்தால் இவ்வாறு ஏற்படும். துருப்பிடித்த பகுதிகளை நீக்கி பெயிண்ட் அடித்தால் குறை நிவர்த்தியாகி விடும்.

12. சாணக் கரைசல்கள் உள் செல்லும்,வெளிச் செல்லும் குழாயை பரீசிலனை செய்தல் (இரும்பு வாயுக் கொள்கலம் உள்ள சாதனம்) : சுத்தமான கரைசல் ஊற்றாவிட்டால் குழாயில் அடைப்பு ஏற்படும். கால் நடைகளின் சாணக்கரைசல் மட்டும் ஊற்றுதல் மற்றும் குழாயை சுத்தமாக செய்தால் இக்குறை நீங்கும்.

13. சாதனத்தை சுற்றிலும் சுத்தமில்லாதிருத்தல் வெளி வந்த சாணக் கரைசல் அப்புறப்படுத்தாமல் இருந்தால் இவ்வாறு ஏற்படும். இதற்கு மத்திய உரக் கலவைக்கு சாணக் கரைசலைக் செலுத்தி உபயோகிக்க வேண்டும்.
நன்றி: india Development Gateway
மிக்க நன்றி
மிக்க பயனுள்ள தகவல்கள். சாண எரிவாயுவை பற்றி அழ்ந்த அறிமுகம்.

Reply to Discussion

RSS

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service