விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

 

Karthika Mayilsamy

உயிர் உரங்களை வேளாண் பெருமக்கள் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்களா? -தமிழில் பதில் அளிக்கவும். விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதே வி.த.ஊ. நோக்கம்..

ஆம் எனில்,உயிர் உரங்களின் தற்போதைய நிலை என்ன?

Views: 137

Reply to This

Replies to This Discussion

மேலும் விவரங்களுக்கு plz click the link http://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_biofertilizertechnol...
அசோலாப்பாசி - உற்பத்தியும் கால்நடை உற்பத்தியில் பயன்பாடும்:
அசோலா உற்பத்திக்குத் தேவையானவை: அசோலாவை உற்பத்தி செய்ய அதிகம் செலவு செய்யத் தேவையில்லை. சிறிய இடம், சுத்தமான தண்ணீர், பிளாஸ்டிக் தாள், சாணம், யூரியா மற்றும் சூப்பர் பாஸ்பேட் சிறிதளவு மற்றும் வளரவிடத் தேவையான விதைப்பாசி ஆகியவையே அதன் உற்பத்திக்குத் தேவையான பொருட்களாகும். விதைப்பாசி என்பது ஏற்கனவே நன்றாக வளர்ந்த பாசியேயாகும்.

அசோலா உற்பத்தி செய்யும் வழிமுறைகள்: 2 மீட்டருக்கு 2 மீட்டர் அளவில் 1 அடி ஆழம் கொண்ட குழியினை நிழலான இடத்தில் வெட்ட வேண்டும். சில்பாலின் பிளாஸ்டிக் விரிப்பை இக்குழியில் விரிக்க வேண்டும். இதன்மேல் முக்கால் அடிக்கு மண் (வயல் மண் உகந்தது) போட்டு அதன் மேல் கால் அடிக்குத் தண்ணீர் விடவேண்டும். சாணம் 20 கிலோவினை இதில் கரைத்துவிட வேண்டும். பின் யூரியா மற்றும் சூப்பர் பாஸ்பேட் தலா 10 கிராம் வீதம் இதில் கரைத்துவிட வேண்டும். இதில் 2 கிலோ அசோலா விதைப்பாசியை இடவேண்டும். அசோலா தொட்டியில் தண்ணீரின் அளவு எப்பொழுதும் குறையாது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பத்து நாட்களுக்கு ஒரு முறை சாணம், யூரியா மற்றும் சூப்பர் பாஸ்பேட் போட்டுக் குழியை கிளறிவிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பழைய பாசியை அகற்றிவிட்டு புதியவற்றைச் சேகரிக்க வேண்டும்.

அசோலாவைத் தீவனமாகப் பயன்படுத்துதல்: மாடுகளுக்கு: பசுமையான அசோலாவை மாட்டுக்கு நாளொன்றுக்கு 2 கிலோ வரை கொடுக்கலாம். இதனால் பால் உற்பத்தி 15 முதல் 20 சதம் அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச்சத்து 10 சதம் வரை உயருகிறது. கொழுப்பு அல்லாத திடப்பொருட்களின் அளவு 3 சதம் வரை கூடுகிறது. அசோலாவைத் தீவனமாக அளிக்கும்பொழுது முதலில் சிறிது வயிற்றுப் போக்கு இருந்தாலும் பழகியபின் இச்சிக்கல் நீங்கி குறைந்த செலவில் நிறைந்த வருமானம் பெற வழிகோலும்.

ஆடுகளுக்கு: கலப்புத் தீவனத்துடன் தினமும் 100 முதல் 200 கிராம் வரை அளிப்பதன் மூலம் பசுந்தீவனத்தின் அளவினைக் குறைக்கலாம். இதைத் தீவனமாக அளிப்பதன் மூலம் இளம் ஆடுகளின் உடல் எடையை வெகுவாக அதிகரிக்கலாம்.

பன்றிகளுக்கு: வளர்ந்த 1 வருட வயதுடைய பன்றிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு கிலோ வீதம் கலப்புத் தீவனத்தில் சேர்த்து அளிக்கும் போது தீவனச் செலவைக் குறைப்பதுடன் அவற்றின் உடல் எடையையும் வெகுவாகக் கூட்டலாம்


கோழிகளுக்கு: பசுமையான அசோலாவை நாட்டுக்கோழிகளுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 10 கிராம் வரை கொடுக்கலாம். முட்டைக் கோழிகளுக்கு தினமும் 5 முதல் 10 கிராம் வரை கொடுப்பதன் மூலம் தீவனச் செலவை வெகுவாகக் குறைக்கலாம். மேலும் வணிகரீதியாக மக்களை அதிகம் கவரக்கூடிய வகையில் முட்டையின் மஞ்சள் கருவின் நிறமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புறக்கடைக்கோழி வளர்ப்பில் அசோலாவைத் தோட்டங்களிலேயே வளர்த்து நாட்டுக் கோழிகளுக்குத் தீவனமாக வழங்குவதன் மூலம்முட்டை உற்பத்தி மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்வதோடு அவைகளைத் தாக்கும் முக்கிய நோய்களுக்கு எதிரான எதிர்ப்புசக்தியையும் அதிகரிக்கலாம்.
உயிர் உரங்களில் முக்கிய பிரச்சனை அதில் உள்ள நுண்ணியிரிகளின் வீரியம் மிக முக்கியம். தற்போது உற்பத்தி செய்ய படும் உயிர் உரங்களில் உண்மையிலேயே வீரிய மிக்க நுண்ணியிரிகள் உள்ளதா என்பதை விவசாயிகள் உபயோகித்து அதன் விளைச்ச்ளிலிரும்த்தே கண்டறிய முடியும்.

ரைசோபியம் மற்றும் பாஸ்போபேக்டீரியா பற்றி பிரச்சனை இல்லை. ஆனால் அசோஸ்பைரில்லம் மற்றும் அசிட்டோபேக்டர் பிரச்சனை வேறு. 2 மூலக்கூறு தழை சத்தை நிலை படுத்த 16 ATP எனர்ஜி தேவை படும். ஆனால் நுண்ணியிரிக்கு தேவையோ மிக குறைந்த அளவு தழை சத்து. அந்த தழை சத்தை நுண்ணியிரிகள் மண்ணிலிருந்து எளிதாக எடுத்து கொள்ள முடியும். நிச்சயம் 16 ATP செலவு செய்து தழை சத்தை நிலை படுத்தாது. ரைசோபியம் வேருக்கு உள் வளர்வதால் நிச்சயம் தழை சத்தை நிலை படுத்தும்
பயன்பாடு குறைவு உள்ளது , பாமர மக்களை சென்று அடயவில்லை ,
விவசாயிகள் மத்தியில் உயிர் உரம் பயன்பாடு இன்றும் மிக மிக குரைவே. இதற்க்கு காரணம்
1. ரசாயன உரம் போல் உயிர் உரம் உடனே வேலை செய்யமுடியாது. நம் விவசாயிகள் இன்று யூரியா போட்டால் 2வது நாள் பச்சையை பார்த்து பழகிவிட்டதனால் வந்த விளைவு.
2. தொடர்ந்து உபையோகிக்க வேண்டும். முதல் 1 அல்லது 2 வருடம் மட்டும் என்றாலும் இதுவும் ஒர் காரணம்.
3. Technology Transfer உயிர் உரம் சார்ந்த வகையில் இன்றும் சரிவர இல்லை. Bio fertiliser இருப்பது பாதி விவசாயிகளுக்கு தெரியாது என்றால் அதில் இப்போது உள்ள Technology, உயிர் உரம் பயன்படுத்தும் பாதி விவசாயிகளுக்கு தெரியாது. Liquid Biofertiliser வந்தது இன்றும் பல விவசாயிகளுக்கு தெரியாது.
4. உயிர் உரமானது மன்னில் நிலைது வாழ சூழல் மேம்படுத்த விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். அப்போழுதுதான் அது பயன் தரும்.
5. ரசாயன களைகொள்ளி பயன்பாடு விவசாயிகள் மத்தியில் நல்ல ஆதரவு பெற்றுள்ளது. இது எங்கு சென்றடையபோகிறதோ தெரியவில்லை. களை எடுக்க ஆள் இல்லாமை, பெறுகி வரும் களைகள், கூட்டு களை மேம்பாடு இல்லாமை இதற்கு முக்கிய காரணம்.

இதற்கு தீர்வு கண்டால் உயிர் உரம் விவசாயிகளுக்கு மத்தியில் உயிர் பெரும். இல்லையெனில் lab level succes மட்டுமே. விவசாயிகளுக்கு இதை சார்ந்த விளக்கத்தையும், தொழில்நுட்ப்பத்தையும் கொண்டுசெல்ல வேண்டும். இதற்க்கு அரசு மட்டுமே தீர்வு காண முடியும் என்று நினைக்காமல் இதை பற்றி அறிந்த அனைவரும் பங்களிக்க வேண்டும். பங்களிக்க வாய்ப்பு கிடைத்தால் பதிவிடுங்கள், நானும் பதிவு செய்கிறேன். Biofertiliser technology, pest and herb management போன்ற தொகுப்பை பதிவிட்டால் நல்லது.

இந்நாட்களில்  பிறந்த குழந்தைக்கு  பல வித   தடுப்பு    வூசிகள் போடுகின்றனர் .இது பிறந்த சில மதங்களில்  சையப் படுகின்ர்த்து.  இதற்கு காரணம்  விழிப்புணர்ச்சி , அரசாங்க  முயற்சியும் கூட என்றும் சொல்லலாம் . ஆதுபோல பெற்றோர்களுக்கு   எப்படி  விழிப்புணர்ச்சி  ஏற்பட்டதோ  அப்படி   விவசாயிகளிடம்   ஏற்படுத வேண்டும் , அரசு  பலநேரங்களில் காஷ் - பணமாக மானியங்கள் தருகின்றது . ஏன் , இந்த பெரும் நன்மை தரும்  உயீற்  உரத்தை  பணத்திர்க்கு பதில்   கொடுக்கக்கூடாது? 

hello Mr.மயில்சாமி... really lot of thanks for you. During your studies you are trying to help our formers.....this is really very good achivement from you....pls continue such kind of supports for our formers...

thanks babu (contactbabu@yahoo.com)

Reply to Discussion

RSS

தகவல்கள்

நிகழ்ச்சிகள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service